|
கோத்ரம்
கோத்ரம்
|
Article By: பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் |
Posted on: 03/08/2011 |
Visits:1880 |
Comments:0 |
|
|
கோத்ரம் ! என்றால் வம்ஸாவளி என்று பொருள். அதாவது இந்துக்களாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும். ஒரு ரிஷி / முனிவர்கள் சந்ததியில் வந்தவர்கள்தாம். உதாரணமாக பரத்வாஜர் வம்சத்தில் வந்தவர்களை பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்-ந்தவர்கள் என்கிறோம். அதுபோல பார்கவ முனிவரின் வழிவந்தவர்கள் பார்கவ கோத்ரகாரர்கள். இதுபோன்று பலகோத்ரங்கள் இருக்கின்றன. தாங்கள் எந்த முனிவரின் சந்ததியில் வந்தவர்கள் என்று அறியாதவர்கள்கூட, சிவபக்தர்களாக இருந்தால், சிவகோத்ரம் என்றும், விஷ்ணு பக்தர்களாக இருந்தால், விஷ்ணு-கோத்ரம் என்று தங்களைக் கூறிக்கொள்வர். ஒரு கோத்ரத்தில் பிறந்த அனை-வருக்குமே ரத்த சம்மந்தமுண்டு. அவர்கள் சகோதர, சகோதரிகளாகிறார்கள். எனவேதான் ஒரே கோத்ரத்தைச்சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், பிள்ளைக்கும் திருமணம் செய்வதில்லை. மேலும் ஒரே கோத்ரத்தைச்சேர்ந்தவர்கள் திருமணம் புரிந்துகொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறக்க வாய்ப்புண்டு. ஆனால் இன்று அநேகமாகக் காதல் திருமணங்களே நடக்கின்றன. ஒருவரை காதலிக்கும்முன்பு என்ன கோத்ரம் என்று கேட்டா காதலிக்க முடியும். ஆகவே பெண்வீட்டார், பெண்ணின் தாய் மாமனைக் கொண்டு கன்னிகாதானம் செய்யச்சொல்லி நடத்துகின்றனர். இது மிக தவறு. ஏனென்றால், சாஸ்த்ர பூர்வ-மாக அக்னி வளர்த்து, மந்திரம் ஜபித்து ஒரு குழந்தையை ஸ்வீகாரம் எடுத்துக்-கொண்டால்தான் கோத்ரம் மாறும். குறைந்த பக்ஷம், திருமணத்திற்கு முதல் நாளோ, அன்று காலையோ நடக்கும் விரதத்தையாவது பெண்ணின் தாய்மாம-னைக்கொண்டு செய்வித்து, பிறகு அவரை கன்னிகாதானம் செய்து கொடுக்கச் சொல்லலாமே!
சிந்திப்பீர்களா.
|
|
Reviewers Comments
No Comments
|
|
|