|
நாகரிகம்
நாகரிகம்
|
Article By: மஹாலக்ஷ்மி விஜயராகவன் கிண்டி, சென்னை. |
Posted on: 25/07/2009 |
Visits:1564 |
Comments:2 |
|
|
இவ்வுலகில் மனிதர்கள் இருக்க போவது சிறிய காலமே.இதில் போட்டிகள், பொறாமைகள்,அகங்காரங்கள்,அடுத்தவர்களை குறை கூறுதல்,இகழ்வாக பேசுதல்,போன்றவைகள் நிறைய வருகின்றன. அடுத்தவர்களை குறை கூறுபவர்கள் முதலில் தாம் எப்படி இருக்கிறோம், என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதை யோசிப்பதில்லை. ஒருவருக்கு தீங்கு இழைப்பது குறை கூறுவது போன்றவை ஏற்படின் ஒரு காலத்தில் நிச்சயமாக அதுவே நமக்கு திரும்ப வரும். வெளித் தோற்றத்தில் நாகரிகமாக அழகுற நகை, வகை வகையன ஆடை போன்றவை அணிந்து என்ன பிரயோசனம்? நாகரிகம் என்பது மனத்திலும் இருக்க வேண்டும். அதிலும் வயதானவர்கள் இருக்க போவது மிகச் சிறிய காலமே. இதற்குள் பிள்ளைகள் பெற்றொர்களிடம் சண்டை, தனிக்குடித்தனம்,மனகசப்பு..........போன்றவைகளை நிறைய இந்த சமூகத்தில் ஏற்படுகின்றன.வயதானவர்கள் இருக்கும் வரை இவ்வுலகில் சந்தோசமாக இருக்கட்டுமே.இவைகள் இவ்வுலகில் எப்பொழுது மாறும்? ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவர் மனத்திலும் நாகரிகம் இருக்குமேயானால் அக்குடும்பம் மிக உயர்வாக இருக்கும்.
|
|
Reviewers Comments
firstly my apologies, that I cant write or type in tamil. Let me rephrase the comments.
The main issue in any family or rather any organization would be EGO, if one could shatter the same and come out of it, which is difficult but not impossible at all, we can live happily and make others happy. Problems do exist to everyone, who doesnt have it, starting from the first citizen of India to the last one who begs on the streets everybody has problems according to his views. to perceive the problem as a problem and brooding over it is a problem, instead face it, every problem has a solution otherwise it wouldnt be called a problem. the most important aspect would be not to create a problem and then search a solution. We have millions of people who are below average means of living, we are far better than them in all respects, we should thank the Almighty to bless us with all we have. To earn, to strive and to dream and accomplish is not wrong, how we do it is more important. To be civilized is not by wearing costly clothes, jewelery, traveling by BMW's or by eating out in star hotels, but by refining the heart and the mind to greater means is important.
If some one can translate the comments in Tamil for better understanding I would be grateful. I hope I am permitted to voice my views in English here, I had taken Ok from VVR before writing it down.
Comment By:Venkat Narayanan
Date:7/27/2009
என்னால் தமிழில் எழுதவோ அல்லது மெயில் அனுப்பவோ முடியாது. அதற்க்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மமதை அல்லது அகங்காரத்தை விட்டு வெளியே வருவது கடினமாக இருந்தாலும் முடியாதது இல்லை. உலகில் நாமும் சநதோஷமாக வாழ்ந்து பிறரையும் சந்தோஷமாக வாழ்விக்க வைக்கலாம். உலகில் பெரிய,சிறிய மனிதர்கள் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பிரச்சனைகள் வருகின்றன. ஒரு பிரச்சனையை பிரச்சனையாக பார்ப்பதாலும், அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாலும் அப்பிரச்ச்னைக்கு தீர்வு கிடையாது. அதற்கு மாறாக பிரச்சனையை எதிர்க்கொண்டால் விடை கிடைக்கும். பிரச்சனையை உருவாக்கி அதற்கு விடை தேடுவது நல்லதல்ல. உலகில் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் இருக்கிறார்கள். நாம் அவர்களை காட்டிலும் நன்றாகவே உள்ளோம்.நாம் இதற்க்கு நன்றி கூற வேண்டும். சம்பாதிப்பதற்க்கும், கனவு காண்பதற்க்கும் அக்கனவை பூர்த்தி செய்வதும் தவறில்லை. ஆனால் நாம் எப்படி செய்கிறோம் என்பது தான் முக்கியம். நாகரிகம் என்பது நாம் அணியும் உயர்ரக ஆடைகளிலோ நகைகளிலோ அல்லது BMW போன்ற வாகனங்களிலோ அல்லது பெரிய ஹோட்டல்களிலோ சாப்பிடுவதலோ அல்ல. மாறாக நமது இதயத்தையும்,மனதையும் மாசடையாமலிருக்க செய்வது முக்கியம்.
Comment By:தமிழாக்கம் விஜயராகவன்
Date:7/28/2009
|
|
|