Home Photo Gallery Events Temples Articles Contact Us

துளசி


துளசி
Article By: விஜயராகவன் Posted on: 05/11/2009
Visits:1444 Comments:0
துளசி தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். துளசி வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப்பொருளாகவும் பயன்ப்டுத்த படுகிறது. துளசி வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும். துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது. முந்தைய காலங்களில் மருதோன்றி (மருதாணி)ப் பூவைத் தலையில் வைத்துக் கொள்ளும் பழக்கம் பெண்களிடையே இருந்தது. முடிக்கு வாசனை கொடுக்கும் வல்லமை பெற்றது மருதாணிப் பூ என்று சொல்வர். ஆனால் உண்மைக் காரணம் அதுவல்ல. மருதாணிப் பூவின் வாசத்திற்கு பேனை விரட்டும் சக்தி உண்டு. துளசியுடன், மருதாணிப் பூவையும் அரைத்துத் தலையில் தடவி ஊறிக் குளித்தால், பேன் மறைந்து விடும். மேலும் சில தகவல்; மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி தெரிவித்துள்ளார். டாக்டர் பூபேஷ் படேல் என்ற டாக்டர் கூறுகையில், துளசியால் பன்றிக் காய்ச்சலை வராமல் தவிர்க்க முடியும். 20 அல்லது 25 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி அல்லது மை போல அரைத்தோ, வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பன்றிக் காய்ச்சல் குணமாகும். -------- துளசியின் மகிமையை உலகிற்கு உணர்த்த கண்ணன் நாரதர் உதவியுடன் ஆடிய நாடகம்தான் துலாபாரம். ஒருசமயம் ருக்மிணி, ராதை இருவரின் சம்மதத்துடன் கண்ணனை நாரதருக்கு தானமளித்தாள் சத்யபாமா . கண்ணனை தானமாகப் பெற்ற நாரதர் மீண்டும் சத்யபாமாவிடமே கண்ணனைத் தந்துவிட்டார். அதற்கு ஈடாக கண்ணனின் எடைக்கு நிகரான பொருள் தரும்படிக் கேட்டார். அதன்படி தராசின் ஒரு தட்டில் கண்ணன் இருக்க, மறுதட்டில் தன்னிட மிருந்த பொன், பொருள், ஆபரணங் களையெல்லாம் வைத்தாள் சத்யபாமா. ஆனால் தராசு சற்றுகூட அசையவில்லை. ருக்மிணியும் அவ்வாறே செய்தாள்; பயனில்லை. மற்றவர்களும் முயன்று பார்த்தனர். ஆனால் தராசு அசையவே இல்லை. கடைசியாக ராதையிடம் ஆலோசனை கேட்டனர். ராதை அப்பொருட்களை அப்புறப் படுத்திவிட்டு, கண்ணனை மனதாரத் துதித்து ஒரு துளசி தளத்தை மட்டும் தராசுத் தட்டில் வைக்க, கண்ணன் தட்டு உயர்ந்து துளசி இலை இருந்த தட்டு தாழ்ந்தது; ராதையின் பக்தியையும் துளசியின் சிறப்பையும் உயர்த்திக் காட்டியது.
Add Comments View Comments