|
த்யானம்
த்யானம்
|
Article By: ஜெயஸ்ரீ பிரகாஷ் பட்டாச்சார் |
Posted on: 11/12/2009 |
Visits:1527 |
Comments:1 |
|
|
பலூனுக்குள் அடங்கிய காற்று எப்படி அசையாமல் இருக்குமோ, அது போல் பகவானிடம் கட்டுப்பட்ட மனம் அசையக் கூடாது. இதுவே த்யானம். காற்றில்லாதா இடத்தில் வைக்கப்பட்ட தீபம் அசையாமல் எரிவதைப்போல் மனம் பகவானிடம் லயித்துவிட்டதாகில் அதுதான் த்யானம். பின்னால் தன்னைச் சுடுபவன் வந்திருப்பதைக்கூட அறியாமல் கொக்கு மீனை நோக்கி அமர்ந்திருப்பதைப்போல், ஆபத்திலுங்கூட மனம் அலையாமல் பகவானிடம் ஒன்றிவிட்டால் அதுவே த்யானம். ஒரு வேடன் ஒரு பறவையைக் குறி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பின்னால் ஒரு பெரிய படையுடன் அரசனே சென்றும் அவன் அதை அறியவில்லை. ஏனெனில் தான் குறி வைத்த பறவையினிடமே மனம் லயித்துப் போயிருந்தான் அவன். அது போல் எத்தகைய பேரிரைச்சலிலும் மனம் பகவானிடமே ஓன்றிப்போனால் அதுவே த்யானம்.
|
|
Reviewers Comments
IT IS NICE
I HAVE EXPECTED DHYANA SLOKARS OF VARIOUS TEMPLE IN THIS HEAD BUT I GET THE DEFINITION FOR DHYANAM. IT IS N ICE HOWEER I REQUEST YOU IF ANY COPY OF DHAYANA MUKTHAVALI AVAILABE THEN INFORM ME.
MY MOBLE NO 94437 70691.
Comment By:R SRINIVASAMURTHY
Date:1/3/2010
|
|
|